ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹரியானா முதலமைச்சருக்கு கரோனா! - மனோகர் லால் கத்தாருக்கு கரோனா உறுதி
சண்டிகர் : ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதனடிப்படையில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட மனோகர் லால் கட்டாருக்கு தற்போது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் “கடந்த வாரம் என்னை சந்திந்த, என்னுடன் தொடர்பிலிருந்த அனைத்து சகோதர சகோதரிகளும் விரைவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.