தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! தந்தை கைது - Gurugram

ஹரியானா: குருகிராமத்தில் 8 வயது சிறுமிக்கு, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த தந்தையை, காவல் துறையினர் கைது செய்தனர்.

haryana

By

Published : Apr 30, 2019, 2:28 PM IST

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ள நிலையில், அரசு அதைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறைந்தபாடில்லை. இந்தச் சூழலில் மற்றுமொரு சோக சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் தந்தையால் நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக பலமுறை தொடர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ஷம்ஷர் சிங் கூறுகையில், 'கடந்த சில தினங்களாக அந்தச் சிறுமி இயல்பாக இல்லாமல் சோர்ந்து போய் இருந்துள்ளார். இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது, சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர்களிடம் கூறியுள்ளார்.

பட்டோடி பகுதியில் சிறுமி தந்தையுடன் வசித்துவந்துள்ளார். தாயின் மறைவிற்குப் பிறகு, தினமும் குடித்துவிட்டு சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் இரண்டுமுறை குற்றவாளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான்' என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details