குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை வைத்து, பஞ்சாப் மாநில அரசு அரசியல் விளையாடுவதாக மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் திங்களன்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
‘நான் பார்த்ததில் மிகவும் தவறான எண்ண ஓட்டமுள்ள பெண்’ - பஞ்சாப் முதலமைச்சர் காட்டம்
சண்டிகர்: குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பஞ்சாப் அரசின் மீதான மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், “சீக்கியர்களை அவமரியாதை செய்யும் விதமாக எந்த சீக்கியராலும் பேச முடியாது. அகல் தக்தின் அதிகாரத்தை தனது "பொறுப்பற்ற கருத்துக்களால்" இழிவுபடுத்த முயல்வது கடும் கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார்.
மேலும், ஹர்சிம்ரத் நான் இதுவரை பார்த்ததில் மிகவும் தவறான எண்ண ஓட்டமுள்ள பெண் என்றும் நேர்த்தியான உண்மைகளைச் சரிவர அறியாமல், எப்போதும் பகுத்தறிவற்ற அறிக்கைகளை வெளியிடும் பழக்கம் அவருக்கு உள்ளது; அது என்னை எப்போதும் எரிச்சலூட்டும் விதமாக அமைகிறது என்றும் சாடியுள்ளார்.