உலகப் புகையிலை இல்லாத தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
"புகையிலைக்கு எதிரானப் போராட்டம் என்பது எனது தனிப்பட்ட போராட்டமாகும். புகையிலைப் பழக்கம் ஒரு தனி மனிதரை மட்டும் இல்லை; அவரின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என்பதை ஈ.என்.டி மருத்துவரான, என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மேலும் புகையிலைப் பொருட்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகையிலை நிறுவனங்கள் ஆண்டிற்குப் புகையிலை விளம்பரத்திற்கு மட்டும் 62.82 கோடி ரூபாய் செலவளிக்கிறார்கள் என்றும்; இதில் அதிகமாக இதுபோன்ற இளைஞர்கள் புகையிலை நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர் எனவும்; இதனால் 13 - 15 வயது இளைஞர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிகிறது. அவர்களில் 40 மில்லியன் இளைஞர்கள் புகையிலையைப் பயன்படுத்தி வருகின்றனர் என உலக சுகாதார மையத்தியன் தகவல் தெரிவித்துள்ளது.