உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், ரஞ்சன் கோகாய் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் வழக்கு விரைவில் விசாரணை!
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார்.
ranjan gogoi
இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து எப்போது தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவிவருகிறது.
இந்த நிலையில், கோடைகால விடுமுறைக்கு முன்பு ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார்.