தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹர்திக் படேலுக்கு ஜன.24 வரை நீதிமன்ற காவல் - நீதிமன்ற காவலில்

அகமதாபாத்: காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹர்திக் பட்டேலை ஜனவரி 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hardik Patel sent to judicial custody
Hardik Patel sent to judicial custody

By

Published : Jan 19, 2020, 10:30 AM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவராக வலம்வருபவர் ஹர்திக் படேல். இவர் மீது 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேச துரோக வழக்கு தொடர்பாக அகமதாபாத் நீதிமன்றம் இவரை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர் நேரில் ஆஜராகமல் இருந்ததால், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி குஜராத் காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்திரவிட்டது.

இதனையடுத்து ஹர்திக் படேல், அகமதாபாத் மாவட்டத்திலுள்ள விராம்காம் நகரத்தில் குஜராத் குற்றப்பிரிவு காவல் துரையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து ஹர்திக் படேலை ஜனவரி 24ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு சம்மன்

ABOUT THE AUTHOR

...view details