தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டில் அதிரடி ரெய்டு... பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது! - Indian Penal Code

ஜம்மு: வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Hardcore JeM OGW arrested along IB in Jammu
Hardcore JeM OGW arrested along IB in Jammu

By

Published : Apr 11, 2020, 6:14 PM IST

ஜம்மு காஷ்மீரிலுள்ள குப்வாரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மது முஸபர் என்ற பயங்கராவதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details