தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மனிதம் எங்கே?' சாத்தான்குளம் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பும் ஹர்பஜன் - ஜெயராஜ் - பென்னிக்ஸ்

சாத்தான்குளம் விவகாரம் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

harbhajan-singh-tweet-on-sathankulam-issue
harbhajan-singh-tweet-on-sathankulam-issue

By

Published : Jun 27, 2020, 12:45 PM IST

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து தமிழில் ட்வீட் செய்து வந்த ஹர்பஜன் சிங், தற்போது தமிழ்நாட்டில் எழும் சமூக பிரச்னைகளுக்காகவும் ட்வீட் செய்ய தொடங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜூன் 19ஆம் தேதியன்று, ஊரடங்கின்போது கடையைத் திறந்ததற்காக தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர்.

விசாரணைக் கைதிகள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டாக் மூலம் சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்தன.

இதனால் ட்விட்டரில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது குரல்களை பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது குரலை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.

அதில், ''அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே #JusticeforJayarajAndFenix'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details