17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த மே 30ஆம் தேதி மாலை நடைபெற்றது.
சைக்கிளில் வந்து பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்! - politics
டெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ் வர்தன் இன்று சைக்கிளில் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹர்ஷ் வர்தன்
அப்போது கேபினட் அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வதற்காக தனது சைக்கிளில் இன்று அவர் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்தார். பின்னர், அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு துறை செயலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.