மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் இன்று (நவ.29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தங்கப் பொருட்களுக்கு 916 தர ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று கூறினார்.
இந்த திட்டம் வருகிற ஆண்டு (2020) ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் நகைக் கடைகாரர்கள் தங்களின் பழைய இருப்புகளை விற்பனை செய்ய அல்லது புதிய நகையாக மாற்றிக் கொள்ள ஒரு ஆண்டுக் காலம் அவகாசம் விதிக்கப்படும்.
தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம்: பஸ்வான் தகவல்.! - Union Consumer Affairs Minister Ram Vilas Paswan
டெல்லி: புதிய தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம் என்ற திட்டம் வருகிற ஜனவரி (2020) முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் பழைய நகைகளை விற்க கடைக்காரர்களுக்கு ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட உள்ளது.
![தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம்: பஸ்வான் தகவல்.! Hallmarking to be mandatory for gold jewellery from 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5219130-thumbnail-3x2-bis.jpg)
Hallmarking to be mandatory for gold jewellery from 2021
புதிய நகைகளுக்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் ஹால் மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுகிறது என்றார். தங்கப் பொருட்களில் போலிகளை தடுக்கவும், தரமில்லாத நகைகள் உருவாவதை தடுக்கவும் 916 பி.ஐ.எஸ். ஹால் மார்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் அர்த்தம் 91.6 சதவீதம் தூய தங்கம் என்பதாகும். மீதமுள்ள 9.4 சதவீத உலோகம் ஆபரண தங்கம் செய்ய பயன்படுத்தப்படும் தாமிரம் உள்ளிட்ட இதர உலோகமாகும்.
இதையும் படிங்க: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.232 உயர்வு!