தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனித தவறுகளால் நிகழ்த்தப்பட்ட பெரும் வெடி விபத்துகள்! - பெரும் வெடி விபத்துகள்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சூழலில் உலகில் நிகழ்ந்த அணுவல்லா பெரும் வெடிவிபத்துகள் குறித்து அறிந்துகொள்வோம்.

லெபனான் வெடி விபத்து
லெபனான் வெடி விபத்து

By

Published : Aug 5, 2020, 8:12 PM IST

ஹைதராபாத்:லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் நேற்று (ஆகஸ்ட் 4) மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மனித தவறுகளால் புவியில் நிகழும் அசவுகரியமான, அபாயகரமான சம்பவங்கள் ஏராளம். சூழல், உயிர்கள் என எதற்கும் இதில் விலையில்லாமல் போகிறது. ஆம், உலகில் நிகழ்ந்த அணுவல்லா பெரும் வெடிவிபத்துகள் குறித்து அறிந்துகொள்வோம்.

காணொலி: லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு!

1917: ஹாலிஃபாக்ஸ் வெடிவிபத்து

முதல் உலக போர் சமயத்தில் ப்ரெஞ்சு சரக்கு கப்பல் முழுவதும் வெடி பொருள்களை ஏற்றிக்கொண்டு ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை வந்தடைந்தபோது பெல்ஜியன் கப்பலுடன் மோதியது. 3000 டன் வெடிமருந்து இதனுள் இருந்ததால் பெரும் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 9000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

1947: டெக்சாஸ் சிட்டி விபத்து

டெக்சாஸ் சிட்டி துறைமுகத்தில் சுமார் 2100 டன் அமோனியா நைட்ரேட் உடன் நிறுத்தப்பட்டிருந்த ப்ரெஞ்சு கப்பல் வெடித்து சிதறியது. இதில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 3500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பெய்ரூட் விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் - ட்ரம்ப்

1983: தி முர்டாக் ப்ளீவ்

ஒரு லட்சத்து 13ஆயிரம் லிட்டர் திரவத்தை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில், ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

1984: சான் ஜூவானிகோ விபத்து

உலகின் மிகப்பெரும் தொழிற்சாலைகள் விபத்தில் ஒன்றாகப் பார்க்கப்படும் இவ்விபத்து மெக்சிகோவில் அரங்கேறியது. ரசாயன எரிவாயு வெடித்து சிதறியதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுமோசமான தீக்காயங்களை கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1988: தி பெப்கான் விபத்து

ஒன்பது மில்லியன் பவுண்ட் ஏவூர்தி எரிபொருள், பசிபிக் நிறுவன கிடங்கில் இருந்து வெடித்து சிதறியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தர். இதனால் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

'பெய்ரூட் வெடி விபத்து'- பிரதமர் மோடி இரங்கல்

2005: இங்கிலாந்து ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் எண்ணெய் கிடங்கு விபத்து:

இங்கிலாந்து நாட்டின் பஞ்சிஃபீல்ட் எனும் இடத்தில் நடந்த இந்த கோர வெடி விபத்து, 100 மைல் தூரம் வரை சத்தம் கேட்டதாக தகவல்கள் தெளிவுப்படுத்துகிறது. ஆனால் இந்த விபத்தில் ஒருவர் கூட மரணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details