latest national news புனேவில் நடந்த 'ஜான் ஜாக்ரான்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செயல்தலைவர் ஜேபி நட்டா, 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "சட்டப்பிரிவு 370 ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டாலும், அதற்கான திட்டங்கள் நீண்ட நாட்களாகத் தீட்டப்பட்டுவந்தன. இது நரேந்திர மோடியின் தீர்க்கமான மனோபலத்தினாலும் அமித் ஷாவின் அரசியல் சாணக்கியத்தனத்தினாலும் நிறைவேறியது. சட்டப்பிரிவை நீக்குவதற்கு முன்னரே பள்ளத்தாக்குப் பகுதியில் நாங்கள் சில முன்னேற்பாடுகள் செய்யவேண்டியிருந்தது" என்றார்.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டது குறித்த பாடம் பள்ளியில் இடம்பெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இளைஞர்கள் இது குறித்து எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.