ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டியது இஸ்லாமிய முறைப்படி அவசியமாகும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியா நாட்டிலுள்ள மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இவ்வழக்கம் தடைபட்டது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் குறித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ஹஜ் கமிட்டி மற்றும் பிற இந்திய அமைப்புகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் 2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் படிவங்களைத் தயார் செய்யும். அது மட்டுமின்றி ஹஜ் பயணம் குறித்து சவுதி அரேபியா விரைவில் தேவையான வழிகாட்டுதல்களை அறிவிக்கும் என நம்புகிறோம்” என்றார்.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அலுவலர் மக்ஸூத் அகமது கான், “இந்திய ஹஜ் குழு, பிற அலுவலர்களுடன் ஹஜ் 2021ஆம் ஆண்டுக்கான திட்டமிடல் குறித்த கூட்டம் நடைபெற்றது.