தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமராக சுஷ்மா ஸ்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சைக் கருத்து - திக்விஜய சிங்

போபால் : பாஜக சுஷ்மா ஸ்வராஜை பிரதமராக தேர்ந்தெடுத்திருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்
காங்கிரஸ் மூத்த தலைவர்

By

Published : Aug 19, 2020, 6:47 PM IST

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக சுஷ்மா ஸ்வராஜை பிரதமராக தேர்ந்தெடுத்திருந்தால் அவரது தலைமையில் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2014ஆம் ஆண்டு பாஜக, மோடிக்கு பதில் சுஷ்மா ஸ்வராஜை பிரதமராகத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார், அவர் தலைமையில் நாடும் சிறப்பாக இருந்திருக்கும்.

அவருடனான தொலைக்காட்சி விவாதத்தில் இதனை நான் தெரிவித்திருந்தேன். இதனை நான் தற்போது தெரிவித்துள்ளதால், ஸ்மிருதி இரானி, இதுகுறித்த கனவில் இறங்க வேண்டும் என்று அர்த்தமல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு, சுகாதாரத்துறை, நாடாளுமன்ற விவகாரம், வெளியுறவு என பல்வேறு துறைகளின் அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்துள்ளார். அது மட்டுமின்றி, டெல்லி முதலமைச்சராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்துள்ளார். மேலும் சுஷ்மா, அத்வானிக்கு நெருக்கமானவர் என்றும், மோடியை பிரதமராக அறிவிப்பதற்கு அவர் தொடக்க காலத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சர்வதேச புகைப்பட தினம்: விளைவுகளை ஏற்படுத்தாத புகைப்படம் வீண்!

ABOUT THE AUTHOR

...view details