அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், ஹெச்-1 பி, ஹெச்-2 பி, எல் மற்றும் ஜே பிரிவு விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இது வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றாலும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் பெரும் பிரச்னையை எதிர்கொள்வார்கள்.
ஹெச்-1 பி விசா என்றால் என்ன?
ஹெச்-1 பி விசா என்பது நிரந்தரமாகக் குடியேறாத வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஒரு வகையான விசா முறை. இதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பனியமர்த்திக் கொள்ள முடியும்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி, பொறியியல், மென்பொருள் துறையில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய 1990களில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவில் வழங்கப்படும் விசா வகைகள்
- ஹெச்-1 பி விசா: பல்வேறு துறைகளிலும், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில், திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா
- ஹெச் -2 பி விசா: விவசாயம் சாராத பருவகால தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா
- ஹெச்-4 விசா: ஹெச்-1பி மற்றும் ஹெச்-2பி விசாக்களை வைத்திருக்கும் நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசா
- ஜே-1 விசா: கலாசார மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டம், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா
- ஜே-2 விசா: ஜே-1 விசாக்களை வைத்திருக்கும் நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசா
- எல் -1 விசா: ஒரு நிறுவனத்தின் உயர் மட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் விசா
- எல்-2 விசா: எல் -1 விசாக்களை வைத்திருக்கும் நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசா
யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?