தமிழ்நாடு

tamil nadu

ஜூன் 15ஆம் தேதி குருவாயூர் கோயில் திறப்பு!

By

Published : Jun 6, 2020, 11:51 PM IST

திருவனந்தபுரம்: குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வருகிற 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.

guruvayur-temple-to-open-for-devotees-from-june-15th-virtual-queue-system-to-be-followed
guruvayur-temple-to-open-for-devotees-from-june-15th-virtual-queue-system-to-be-followed

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் கோயில்கள், மத வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளை கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திறக்க அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், கேரள அரசு குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலை வரும் 15ஆம் தேதி் முதல் திறக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, இணையத்தில் முன்பதிவு செய்தவர்களின் வரிசை அடிப்படையில் ஒரு நாளைக்கு 600 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கோயிலில் நாளொன்றுக்கு 60 திருமணங்கள் மட்டும் நடைபெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மணமக்கள் உள்பட கோயிலுக்குள் பத்துபேர் மட்டும் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், பிரசாதம், நெய்வைத்தியம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கக்கூடாது எனவும் கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் எனவும், தகுந்த இடைவெளிகளைப் பின்பற்றவேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக விழா

ABOUT THE AUTHOR

...view details