டெல்லியிலுள்ள மஞ்னு கா தில்லா சீக்கிய குருத்வாராவில் அமைந்திருக்கும் நிர்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) கட்டடம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, நன்கு சுத்தப்படுத்தப்பட்ட 12 அறைகளை குருத்வாரா வழங்கியுள்ளது. இதில், உணவு மற்றும் இதர தேவைகளுக்காக 24 மணிநேர சேவை வழங்கப்படுகிறது. கூடுதல் வசதியாக, வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், உணவு தேவைப்படுபவா்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுமென சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கழகத்தின் தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா காணொலி மூலமாகத் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராட அரசாங்கத்துடன் இணைந்து குருத்வாரா செயல்படும் என தெரிவித்த தலைமை குரு குல்வந்த் சிங், அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவால் வரிமானவரி செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு