தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரம்பை சந்திக்க இந்தியா விரைந்த குஜாராத்தி குடும்பம்! - ட்ரம்பை சந்திக்கும் குடும்பம்

சூரத் : வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க குஜாராத்தி குடும்பத்தினர் இந்தியா வந்துள்ளனர்.

Gujarati family with Modi
மோடியுடன் குஜாராத்தி குடும்பம்

By

Published : Feb 22, 2020, 2:30 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக குஜராத்தில் அகமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் "வணக்கம் ட்ரம்ப்" நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் 40 ஆண்டு காலம் வர்த்தக உறவை பேணி வரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷைலேஷ் பட்டேல் என்பவரின் குடும்பம், இந்தியாவில் ட்ரம்பை சந்திக்கவும், வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் ஆவலாய் காத்திருக்கின்றனர். ட்ரம்பை சந்திக்கும் ஆசையில்தான், ஷைலேஷுடைய குடும்பம் திங்கள்கிழமை சூரத் வந்தடைந்துள்ளனர். அமெரிக்காவில் குடியேறினாலும் இந்திய நிகழ்வுகளில்தான் பட்டேல் குடும்பத்திற்கு ஈடுபாடு அதிகம்.

இதுகுறித்து ஷைலேஷ் பட்டேல், ”ஏற்கனவே, பிரதமர் மோடிக்கு எங்கள் குடும்பம் மிகவும் பரிச்சையம். இரண்டாம் முறையாக மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சமயத்தில் நாங்கள் குடும்பமாக இந்தியாவிற்கு வந்து, அவரை வாழ்த்தினோம். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகை, வர்த்தக அளவில் இந்தியாவையும், அமெரிக்காவையும் வலிமையாக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

இதையும் படிங்க: என்னை பார்க்க ஒரு கோடி மக்கள் வரவுள்ளனர் - இந்திய வருகை குறித்து ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details