தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் 19 பாதிப்பு:குஜராத் ஒழுங்காக கையாளுகிறதா? - எம்.பி. ரவுத் கேள்வி! - குஜராத் ஒழுங்காக கையாளுகிறதா?: எம்பி ரவுத் விமர்சனம்

மும்பை: கரோனா நெருக்கடியைக் கையாளுவதில் குஜராத் மோசமாக செயல்படுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

எம்பி ரவுத்
எம்பி ரவுத்

By

Published : May 27, 2020, 2:59 AM IST

குஜராத் மாநிலத்தில் கரோனா நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையென தொடர்ச்சியாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தும் இதே கருத்தை முன் வைத்துள்ளார்.

சஞ்சய் ரவுத் இதுகுறித்து கூறும்போது, 'மகாராஷ்டிரா அரசை நிலை தடுமாறச் செய்வதற்கான முயற்சிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்படும். அவற்றால் எவ்வித பயனும் இல்லை, அதனுடைய எதிர்வினையை சிலர் அனுபவிப்பார்கள்' என எந்த கட்சியையும் குறிப்பிடாமல் பொது எச்சரிக்கை விடுத்தார்.

பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுதிர் முங்கந்திவார், மகாராஷ்டிராவில் கரோனா உண்டாக்கிய சூழல் ‘கடுமையானது’ என்றாலும், பிரதமரின் ஆட்சிக்குத் தகுதியானதில்லை எனக் கூறினார்.

இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நாராயண் ரானே, 'மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரியை சந்தித்து சிவசேனா தலைமையிலான அரசு கரோனா நெருக்கடியை கையாளுவதில் தோல்வியுற்றது. இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்' எனக் கோரிக்கைவிடுத்தார்.

இதற்குப் பதிலளித்த ரவுத், ”கரோனா நெருக்கடியை குஜராத் மாநில அரசு கையாண்ட விதம் குறித்தும், அங்குள்ள அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்தும் அம்மாநில உயர் நீதிமன்றமே விமர்சித்துள்ளது. ஒருவேளை குடியரசுத் தலைவரின் ஆட்சியைக் கொண்டு வந்தால், மத்திய அரசு முதலில் குஜராத்தை கரோனாவிலிருந்து மீட்டெடுப்பதில்தான் தொடங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் இல்லாமல் 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் பினராயி

ABOUT THE AUTHOR

...view details