தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீனவர்கள் நலன்:  மானியம் வழங்கியதில் தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம்! - மத்திய அரசு

டெல்லி: மீனவர்களின் நலனுக்காக மானியங்களை வழங்கியதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

மீனவர்களின் நலனில் தமிழகம் மூன்றாவது இடம்!

By

Published : Jul 22, 2019, 5:06 PM IST

இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் என ஒன்பது கடற்கரை மாநிலங்கள் உள்ளது. இதில் அதிகமான கடற்பரப்பை கொண்ட மாநிலம் குஜராத் ஆகும். இந்த கடற்கரை மாநிலங்களில் எந்த மாநிலம் அதிகமாக மீனவர்களுக்கு மானியங்களை வழங்கியுள்ளது என்ற தகவல்களை உலக வணிக அமைப்புக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

அந்த தகவலின் படி, 2018-2019 ஆம் நிதியாண்டில் குஜராத் ரூ.247.04 கோடியும், கர்நாடகா ரூ.243.06 கோடியும், தமிழ்நாடு ரூ.180 கோடியும், ஆந்திர பிரதேசம் ரூ.109 கோடியும் வழங்கியுள்ளது. இந்த வரிசையில் மீனவர்களின் நலனுக்காக மானியங்களை வழங்கியதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details