கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுக்க 21 நாள்களுக்கு மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 44 பேருக்கு கரோனா தொற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரகிறது. பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்துகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வடஇந்திய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.