தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமுடியால் உலகசாதனைப் படைத்த இளம்பெண்: சிறப்புப் பேட்டி - உலகில் அதிக நீலமான தலைமுடி

குஜராத்: உலகில் நீளமான தலைமுடியை கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதேயான நிலன்ஷி படேல்.

Guinness world record
Guinness world record

By

Published : Jan 16, 2020, 8:19 AM IST

கின்னஸ் சாதனை

உலகில் பலரும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் எனப்படும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துவருகின்றனர். அந்தவகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான கின்னஸ் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.

தற்போதைய காலத்தில் பெண்கள் சுற்றுச்சூழலுக்குப் பயந்து முடிவளர்த்தலைக் குறைத்துவரும் நிலையில், இளம்பெண் ஒருவர் தனது தலைமுடிக்காகவே கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

190 செமீ தலைமுடி

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் நிலான்ஷி படேல், தனது தலைமுடியை 190 செமீ அளவிற்கு வளர்த்து, புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இது குறித்து நிலான்ஷி படேல் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "எனக்கு ஆறு வயது இருக்கும்போது ஹேர்-கட் செய்தேன். ஆனால் அப்போது என்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால் அப்போதிலிருந்து நான் முடிவு செய்துவிட்டேன்; இனி என்னுடைய தலைமுடியை வெட்டப்போவதில்லை என்று. நான் அப்போது எடுத்த அந்த முடிவுதான் தற்போது எனக்கு இந்தப் பெருமையைத் தேடித்தந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

தாய்க்கு சமர்ப்பணம்

மேலும் அவர் கூறுகையில், இச்சாதனைக்கான அனைத்து பெருமைகளையும் தான் தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். ஏனெனில் அவர்தான் தன்னுடைய தலைமுடியை பாதுகாக்க வழிவகை செய்ததாகவும் அவர் சொன்னார்.

தலைமுடியால் உலகசாதனைப் படைத்த இளம்பெண்-சிறப்புப் பேட்டி

இதற்கு முன் 2018ஆம் ஆண்டு இவர் தனது தலைமுடியை 170.5 செமீ அளவிற்கு வளர்த்து இச்சாதனையைப் படைத்தார். தற்போது தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க: நெகிழிகளுக்கு மாற்று துணி, காகிதம் - விடை சொல்லும் கிராமம்!

ABOUT THE AUTHOR

...view details