குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தகாஷாஷிலா கட்டடத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் தீ விபத்து: கட்டட உரிமையாளர் கைது - Gujarat
காந்தி நகர்: சூரத் நகரில் உள்ள தகாஷாஷிலா கட்டட தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கட்டட உரிமையாளர் கைது
இந்தக் கோர தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்றிரவு தகாஷாஷிலா கட்டட உரிமையாளரான பார்கவ் புட்டானி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், கட்டட நிறுவன உரிமையாளர்களான ஹர்ஷுல், ஜிக்னேஷ் ஆகிய இருவரையும் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.