இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன. இருந்தபோதிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் நான்புராவைச் சேர்ந்த 63 வயது வைர வியாபாரிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மிகுந்த மனவேதனையுடன் இருந்து ஷா தனது வாகனத்தில் நேற்று (ஜூலை 10) காலை ரயில் நிலையம் சென்றார். பின்னர் அங்கு வந்த ரயில் முன் பாய்ந்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.