தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் கரோனாவால் 19 பேர் உயிரிழப்பு! - Gujarat coronavirus death toll rises to 19

காந்திநகர்: குஜராத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று பாதித்து 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் கரோனாவால் இதுவரை 19 பேர் உயிரிழப்பு!
குஜராத்தில் கரோனாவால் இதுவரை 19 பேர் உயிரிழப்பு!

By

Published : Apr 10, 2020, 12:40 PM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பல நாடுகளை அசையவிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் இதுவரை 199 பேர் உயிரிழந்தும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று குஜராத் மாநிலத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மாநில முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி கூறுகையில், “குஜராத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர். மற்றொருவர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் ஆவார். தற்போது இவரது உறவினர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க...நாகையில் மருத்துவருக்கு கரோனா தொற்று!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details