தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நெருங்கும் மாநிலங்களவை தேர்தல்: அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்! - அடுத்தடுத்து ராஜினாமா காங்கிரஸ் எம் எம் ஏ

அகமதாபாத்: மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா
காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா

By

Published : Jun 5, 2020, 6:56 PM IST

குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்‌ஷய் பட்டேல், ஜித்து சவுத்திரி ஆகியோர் தங்களது பதவியை நேற்று (ஜூன் 4) ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.

தற்போது அதே கட்சி எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா, தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 65ஆக குறைந்துள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியால் ஒரேயொரு மாநிலங்களவை உறுப்பினரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

குஜராத்தில் நான்கு இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரண்டு தொகுதிகளை வெல்லவிருந்த காங்கிரஸுக்கு தற்போது ஒரு தொகுதி மட்டும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details