கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 872 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனிடையே, குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பத்ருதீன் ஷேக் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பத்ருதீன் ஷேக்குக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏப்ரல் 15ஆம் தேதி உறுதியானதைத் தொடர்ந்து, அந்த நாளே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சக்திசின் கோஹில் இரங்கல் தெரிவித்துள்ளார்.