தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தைகள் மரணம்: பதில் அளிக்க மறுத்த பாஜக முதலமைச்சர்!

காந்திநகர்: மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்ததைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார்.

Vijay Rupani latest
Vijay Rupani latest

By

Published : Jan 5, 2020, 5:04 PM IST

குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது.

அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய உள்கட்டமைப்பு இல்லாததே மரணங்களுக்கு காரணம் என்றும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பதில் அளிக்க மறுத்த பாஜக முதலமைச்சர்

குழந்தைகளின் தொடர் மரணம் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளிக்காமல் மவுனமாக அங்கிருந்து சென்றுவிட்டார். முதலமைச்சரின் இந்த செயல் பொறுப்பற்ற வகையில் உள்ளதாக பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்

ABOUT THE AUTHOR

...view details