குஜராத் மாநிலம் ஜுனகத் பகுதியில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலங்கா கிராமம் மந்தெர்டா - சாசன் சாலையில் உள்ள பாலம் திடீரென இடிந்துவிழுந்தது. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த நான்கு கார்கள் இடைவெளியில் சிக்கிக்கொண்டன.
குஜராத்தில் கனமழை: பாலம் இடிந்து விழுந்து பலர் படுகாயம் - குஜராத்தில் கன மழையால் பாலம் இடிந்து விழுந்தது
காந்திநகர்: ஜுனகத் அருகே பெய்த கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு கார்கள் இடைவெளியில் சிக்கின. மேலும் இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலம் இடிந்துவிழுந்ததில் இடைவெளியில் சிக்கிக் கொண்ட கார்கள்
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் பாலத்தின் அடியில் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மாநில மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கை; திடீர் ஆய்வு செய்த உதவி ஆட்சியர்!
Last Updated : Oct 7, 2019, 11:38 AM IST
TAGGED:
Gujarat Cars fall into river