தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு உபகரணம் - குஜராத் பலமுறை பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணம்

மருத்துவக் கழிவுகள் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று பாதுகாப்பு உபகரணத்தை தயாரித்துள்ளது.

gujarat copany develops PPE kits
gujarat copany develops PPE kits

By

Published : Apr 26, 2020, 3:52 PM IST

கரோனா தொற்று பரவிவரும் இச்சூழலில், மருத்துவ சிகிச்சைக்கு உபயோகிக்கப்பட்டு கழிவுகளாக தூக்கி வீசப்படும் பயோமெடிக்கல் வேஸ்ட் (biomedical waste) எனப்படும் மருத்துவக் கழிவுகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில், குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று பாதுகாப்பு உபகரணத்தை (reusable Personal protective equipment) உருவாக்கியுள்ளது.

இது குறித்து ஷ்யோர் சேஃப்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தன்த் கூறுகையில், 'இந்தப் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணிபுரியும் மருத்துவர்கள் 100 விழுக்காடு பாதுகாப்பாக இருப்பார்கள், ஏனென்றால் இந்த உபகரணம் பாசிடிவான காற்றழுத்தத்துடன் செயல்படுகிறது. இந்த உடையில் இருக்கும் காற்றின் தரமும் அளவிடப்படுகிறது. சுயமாக தூய்மைபடுத்திக்கொள்ளும் வகையில் இது செயல்படுகிறது. இது பலமுறை உபயோகப்படுத்தும் உபகரணம் என்பதால், மருத்துவ கழிவு உருவாகவும் வாய்ப்பு இருக்காது' என்று தெரிவித்தார்.

இந்தப் பாதுகாப்பு உபகரணத்தை இந்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும், இந்தியப் பாதுகாப்புத் துறைக்கும் வழங்குகிறோம் என்றும் தன்த் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க... மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் விமானம்!

ABOUT THE AUTHOR

...view details