குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டத்தில் கோர்வா பகுதியில் ஜாஃபர் அலி ( zafer ali ) என்னும் நபர் 10 முதல் 12 நாள்கள் தங்கி, அங்கிருந்து ஐஎஸ் அமைப்பு குறித்து பரப்பும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவரை குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்துள்ளனர்.
குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாதி கைது - நடந்தது என்ன? - Gujarat Anti Terrorism Squad
காந்தி நகர்: ஐஎஸ் பயங்கரவாதி அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாதி கைது?
இதே நாளில் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலை நடத்த முற்பட்டதாக காஜா மொய்தீன் (52), அப்துல் சமாத் (28), சயீத் அலி நவாஸ் (32) ஆகிய மூவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: பாட்டி தலையில் டிவியை போட்டு கொலை - பேரன் கைது