தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிர் சரணாலயத்தில் ஒத்திவைக்கப்பட்ட சிங்கங்கள் கணக்கெடுப்புப் பணி - சிங்கங்கள் கணக்கெடுப்பு பணி

குஜராத்: ஊரடங்கு காரணமாக கிர் சரணாலயத்தில் சிங்கங்கள் கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிர் சரணாலய சிங்கங்கள்
கிர் சரணாலய சிங்கங்கள்

By

Published : Apr 23, 2020, 12:57 PM IST

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால், குஜராத் மாநிலத்திலுள்ள கிர் வன விலங்குகள் சரணாலயத்தில் நடத்தப்பட இருந்த சிங்கங்கள் கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கணக்கெடுக்குப்புப் பணிக்கான இந்த வருட ஏற்பாடுகள் மே மாதம் தொடங்கயிருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கிர் சரணாலய சிங்கங்கள்

”ஆசிய சிங்கங்கள் மட்டுமே கிர் சரணாலயத்தில் வசித்துவரும் நிலையில், பருவமழைக் காலமும் சிங்கங்களின் இனப்பெருக்கக் காலமுமான ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் வரை சரணாலயம் வழக்கமாக மூடப்பட்டே இருக்கும். 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முந்தைய கணக்கெடுப்பின்படி கிர் காடுகளில் மொத்தம் 523 சிங்கங்கள் உள்ளன. குஜராத் மாநில அரசு இங்கு வாழும் சிங்கங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதில் கடந்த ஐந்து வருடங்களில் பெரும் கவனம் செலுத்தியுள்ளது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றின் மூலம் 34 சிங்கங்கள் இறந்தன” என கிர் காடுகளின் மூத்த வனச்சரக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் தற்போது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2407ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உள்ளது. கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை ஓரளவு சீராகத் தொடங்கிய பின்னரே இந்த கணக்கெடுப்பு குறித்த பிற முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இரண்டாயிரம் மருத்துவர்களை பணியமர்த்தும் பணியில் ராஜஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details