தபி மாவட்டம் உக்காய் உச்சல் தெஹ்ஸில் அருகே உள்ள பிந்த்குர்ட் கிராமத்தில் உகாய் அணை உள்ளது. இந்த அணைக்கு மார்ச் 10ஆம் தேதி சுற்றுலா வந்த 13 பேர் கொண்ட குழு ஒன்று படகில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, பலத்த காற்று வீசியதால், அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இதில், நான்கு குழந்தைகள் உள்பட 13 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள்களாக மீட்கும் பணியில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்தவர்களின் உடலை நேற்று மீட்டனர். பின்பு, அவர்களது இறுதிச்சடங்கு நேற்று அப்பகுதியிலுள்ள சுந்தர்புரா கிராமத்தில் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: ரோஹிங்யா அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 16 பேர் பலி