கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி, பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க முடியாமல் சூழல் உள்ளன.
கரோனா வைரஸ் காரணத்தால் மாணவர்களின் கற்றல் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த மத்திய அரசால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிக்காட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதனை மாவட்ட நீதிபதி சுகாஸ் எல்.வொய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.