கரோனா பாதிப்பில் அதிகம் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகள். வேலையிண்மை, சரியான உணவு இருப்பிடம் இல்லாமல் சிக்கி தவிக்கும் இவர்கள் நடைபயணமாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் இவர்கள் நடந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சாலையில் செல்லும்போது காவல் துறையினர் இவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.
அவ்வாறு கேரளா முகாமில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நடைபயணமாகவே பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த வீட்டிற்கு செல்ல நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் காலில் செருப்பு கூட அணியாமல் நடைபயணம் மேற்கொண்டதை கண்ட காவல் துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் அவர்கள் தங்கியிருந்த முகாமிற்கே அனுப்பியுள்ளனர்.
முகாமில் தங்காமல் ஏன் நடைபயணம் மேற்கொண்டீர்கள் என கேட்டபோது "போதுமான உணவு கிடைக்காததால் இவ்வாறு செய்தோம்" என கூறியுள்ளனர். மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரம் பயன்படுத்த 2 கிலோ கோதுமை மட்டுமே கிடைக்கிறது எனவும், அரசாங்கமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் வீட்டுக்கு செல்ல விரும்புகிறோம் அதனால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்க தயாராக உள்ளதாக ஒரு தொழிலாளி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயில் சேவை தொடக்கம்: ஜூன் 1ஆம் தேதி முதல் நாள்தோறும் 200 ரயில்கள் இயங்கும்