நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் விமர்சனம் முன்வைத்துவரும் நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக லட்சம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் மட்டும் 1.05 லட்சம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மத்திய அரசுக்குச் செல்ல வேண்டிய பெரும்பான்மை பங்கான ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 20 ஆயிரத்து 569 கோடி ரூபாயாகும். மாநில அரசுக்குச் செல்ல வேண்டிய ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 27 ஆயிரத்து 348 கோடி ரூபாயாகும்.