மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்களுடன் காணொலி மூலம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40ஆவது கூட்டம் ஜுன் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநிலங்களின் வருவாய்களில் கரோனா தொற்றுநோயின் தாக்கம், வருவாய் இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்படயிருக்கிறது.
மோசமான வசூல் மற்றும் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை எதிர்கொண்டுள்ள மத்திய அரசு; ஏப்ரல், மே மாதங்களுக்கான மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் வசூல் புள்ளிவிவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்துள்ளது.
ஆகஸ்ட் 2017ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்யாததால் ஆன, தாமதக் கட்டணங்களை தள்ளுபடி செய்வது குறித்தும் கவுன்சில் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.