தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! - GST

டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு குறைக்கப்பட்ட வரி தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரிகள் கவுன்சில் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

gst

By

Published : Mar 19, 2019, 9:01 AM IST

Updated : Mar 19, 2019, 10:40 AM IST


மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 34ஆவது கூட்டம் இன்று கூடுகிறது. காணொளி காட்சி மூலம் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், கட்டுமானப் பணியில் உள்ள வீடுகளுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி ஐந்து விழுக்காடும், குறைந்த விலை வீடுகளுக்கு ஒரு விழுக்காடும் ஆக குறைத்து நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் புதிய முடிவுகளை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், புதிய வரி விகிதம் அமலுக்கு வர உள்ளதாகவும், புதிய வரி விதிப்பின் கீழ், கட்டுமான நிறுவனங்கள் உள்ளீட்டு வரிப்பயன் பெற முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.



Last Updated : Mar 19, 2019, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details