தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல்? வெடிபொருள்கள் சிக்கின - ஜம்மு காஷ்மீர் சம்பா கத்துவா பகுதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் வெடிபொருள்கள் சிக்கின. இங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

JK's Samba news  jammu news  grenades found in samba  j and k news  jammu and kashmir news today  ஜம்மு காஷ்மீர் வெடிப்பொருள்கள் பறிமுதல்  ஜம்மு காஷ்மீர் சம்பா கத்துவா பகுதி  வெடிப்பொருள்கள் பறிமுதல்
JK's Samba news jammu news grenades found in samba j and k news jammu and kashmir news today ஜம்மு காஷ்மீர் வெடிப்பொருள்கள் பறிமுதல் ஜம்மு காஷ்மீர் சம்பா கத்துவா பகுதி வெடிப்பொருள்கள் பறிமுதல்

By

Published : May 11, 2020, 11:33 AM IST

ஜம்மு காஷ்மீர் யூனியன் சம்பா மாவட்டம் கத்துவா பகுதியில் கையெறி வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் அங்குள்ள கிராமவாசிகளால் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் அளித்த தகவலின்பேரில் அப்பகுதியில் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக காவல் மூத்த அலுவலர் கூறுகையில், “இந்தப் பகுதி முன்னர் ஊடுருவல்காரர்களின் வழியாக இருந்தது.

தற்போது இந்தப் பகுதிகள் மீட்கப்பட்டு கூட்டு நடவடிக்கை நடந்து வருகிறது. இங்கு வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.

சம்பா கத்துவா பகுதிகளில் தற்போது பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சுற்றிவருகின்றனர். வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஒரு லட்சம் பேருக்கு எதிராக வழக்குப்பதிவு - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details