தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்! - காஷ்மீரில் ஏறிகுண்டு தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

blast

By

Published : Oct 29, 2019, 12:07 AM IST

Updated : Oct 29, 2019, 8:02 AM IST

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பயணிகள் மீது பயங்கரவாதிகள் எறிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த 6 பேர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காஷ்மீரில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்

இதேபோல் நேற்று நடந்த தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இங்கு பதற்றம் நிலவும் நிலையில் 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு நாளை காஷ்மீரை பார்வையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 29, 2019, 8:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details