ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்): காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் தூனிவாரி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புட்காம் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாமில் கையெறி குண்டு தாக்குதல்! - kashmir news in tamil
காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Grenade attack at CRPF camp
இந்த தாக்குதலானது மாலை 6:30 மணியளவில் நடந்திருக்கிறது. இதுவரை எந்தவிதமான இழப்புகளும் பதிவுசெய்யப் படவில்லை என சிஆர்பிஎஃப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முகாம் பகுதி மொத்தமாக சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான பணிகளில் மத்திய காவல் படை ஈடுப்பட்டுவருகின்றது.
Last Updated : Apr 24, 2020, 10:19 PM IST