இன்று தமிழ்நாடெங்கும் பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதற்குப் பல தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா. இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துகின்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.