ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் துப்பாக்கியின் தோட்டா தாக்கப்பட்டதில், நான்கு வயது சிறுவன் இறந்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
வான்ஷ் (Vansh) (4), மூத்த சகோதரர் ரோஹித் (10) இருவரும் ஞாயிற்றுக்கிழமை அர்னாஸில் உள்ள மஸ்லோட் கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில், கிராமப் பாதுகாப்புக் குழு (வி.டி.சி) உறுப்பினராக இருக்கும் தாத்தாவின் துப்பாக்கியுடன் சிறுவர்கள் இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர்.