முதியவர் ஒருவர் ஷிருரு சாலையிலிருந்து தண்டவாளத்தைக் கடந்து செல்ல முற்பட்டார். அப்போது எதிர்பாரா விதமாக ரயில் வந்துவிட்டது. அதைக் கவனித்த முதியவர் உடனே தண்டவாளங்களுக்கு நடுவே படுத்து சாமர்த்தியமாகக் காயங்கள் எதுவுமின்றி தப்பித்தார்.
ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய முதியவர்!! - shiruru road
கர்நாடகா: முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் வேளையில் ரயில் வந்ததால் சாமர்த்தியமாகத் தண்டவாளங்களுக்கிடையே படுத்து உயிர் தப்பினார்.
தண்டவாளங்களுக்குள் முதியவர்
இதனையறிந்த ரயில் அலுவலர்கள் ரயிலைப் பாதியிலே நிறுத்தினர். இந்த சம்பவத்தை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். தற்போது அந்த வீடியோ வைராலாகி வருகிறது.