தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில்

அயோத்தியில் பிரமாண்ட முறையில் ராமர் கோயில் 2022ஆம் ஆண்டுக்குள் கட்டப்படவுள்ளது.

Grand Ram temple in Ayodhya before 2022

By

Published : Nov 11, 2019, 3:02 PM IST

அயோத்தி நிலப் பிரச்னை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமருக்கு ஆலயம் எழுப்பப்பட உள்ளது. ராமர் கோயில் ஆலய திருப்பணிகள் வருகிற 2022ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்த கோயில் தொடர்பாக வரைபடம் மற்றும் ராமர் சிலைகளின் மாதிரிகளை யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான உத்தரப் பிரதேச வெளியிட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் மாதிரி வரைபடம்.!

பிரமாண்டமாக அமையவுள்ள இந்த ராமர் கோயில், 240 அடி நீளமும், 145 அடி விட்டமும் (அகலமும்) கொண்டது. 141 அடி உயரத்தில் கோயில் அமையவுள்ளது. நான்கடி சுற்றளவில் 251 தூண்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயிலில் தியான மண்டபம், ராமாயாணம் உள்ளிட்ட இதிகாசங்களை கொண்ட நூலகம், ஆன்மிக ஞானிகள் தங்கும் கூடம் மற்றும் யாத்ரீகர்கள் (பக்தர்கள், பயணிகள்) தங்கும் வசதிகள் கொண்ட அறைகள் உள்ளிட்டவை கட்டப்பட இருக்கின்றன.

ராமர் மற்றும் இதர சிலைகளும் அக்கோயிலுக்குள் அமைய இருக்கின்றன. அதுமட்டுமின்றி நவீன ராமாயண அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்துமிட வசதிகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட இருக்கின்றன..

இதையும் படிங்க : அயோத்தி தீர்ப்பு இருதரப்புக்கும் வெற்றியே...!

ABOUT THE AUTHOR

...view details