தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்

டெல்லி: நெருக்கடியான நேரத்தில் மக்களை கசக்கி பணம் பெறுவதற்கு பதில், அரசு அவர்களுக்கு பணம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

chidambaram
chidambaram

By

Published : May 6, 2020, 5:44 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்று இருப்பதால் மார்ச் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

ஊரடங்கால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அரசின் வருவாய் முற்றிலும் முடங்கியது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை சமீபத்தில் உயர்த்தியது. அதைத்தொடர்ந்து மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 32.98ஆகவும் டீசல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 31.83ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள சிதம்பரம், நெருக்கடியான நேரத்தில் மக்களை கசக்கி பணம் வாங்குவதற்கு பதில் அரசு அவர்களுக்கு பணம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் நோயால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இம்மாதிரியான காலத்தில், பற்றாக்குறையை தீர்க்க அரசு கடன் வாங்கியிருக்க வேண்டுமே தவிர, வரியை உயர்த்தியிருக்கக் கூடாது. பொருளாதாரம் ஏற்றம் காணும்போது விதிக்கப்படும் வரி உயர்வை நியாயப்படுத்த முடியும். நடுத்தர, ஏழை மக்கள் நெருக்கடியை சந்தித்துள்ளனர். அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கு நேரெதிரான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது!

ABOUT THE AUTHOR

...view details