லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக இது குறித்து பேசிய மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ''இந்திய வீரர்கள் மீதான சீனாவின் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த விவகாரம் தற்போது முழுமையாகத் தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்கள்மீது சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரச்னையை மறுத்து ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. இதற்கான விலையை நமது ராணுவ வீரர்கள் கொடுத்துள்ளனர்'' எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உடனான அனைத்து கட்சிக் கூட்டம் மாலை நடக்கவுள்ள நிலையில், ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டிப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :ராணுவ வீரர்களை விடுவித்த சீனா