கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் அதன் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனிடையே, கரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் மும்முரமாக ஆராய்ச்சியில் இறங்கியுள்ள நிலையில், மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.
இந்தியாவிலும் மூன்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா மருந்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கான வியூகத்தை மத்திய அரசு வகுக்காமல் இருப்பது அபாய ஒலியை எழுப்புகிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.