தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அந்நிய முதலீட்டை ஈர்க்க முயற்சி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி - சிறுகுறு நிறுவன அமைச்சகம்

டெல்லி: உள்கட்டமைப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Union minister Nitin Gadkari
Union minister Nitin Gadkari

By

Published : Jul 30, 2020, 6:38 AM IST

உள்கட்டமைப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ) ஈர்க்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, சாலை மேம்பாடு குறித்த இணையதள உரையாடலின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

"அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து 100 விழுக்காடு அனுமதி உள்ளது. சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பல்வேறு ஓய்வூதிய நிதி, காப்பீட்டு நிதி, நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஓய்வூதிய நிதி, காப்பீடு நிதி பெறுவதற்காக உலக வங்கி, ஏடிபி, பிரிக்ஸ் வங்கி போன்றவைகளில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details