தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீனாவிடம் மத்திய அரசு ரூ.5,700 கோடி கடன் வாங்கிவிட்டு அந்நாட்டை புறக்கணிக்க கேட்டுக்கொள்கிறது' - சீனாவிடம் இருந்து இந்தியா கடன்

டெல்லி: சீனாவிடமிருந்து மத்திய அரசு 5,700 கோடி ரூபாய் கடன் வாங்கியது. தற்போது மக்களிடையே சீனாவைப் புறக்கணிக்குமாறு கேட்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவர் சஞ்சய் சிங் மத்திய அரசை சாடியுள்ளார்.

சீனாவிடம் இருந்து இந்தியா கடன்
சீனாவிடம் இருந்து இந்தியா கடன்

By

Published : Jun 29, 2020, 8:17 AM IST

Updated : Jun 29, 2020, 9:21 AM IST

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைப் பலரும் கண்டித்துவருகிறார்கள். இந்நிலையில் இந்தியா-சீனா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு தொடர் பேச்சுவார்த்தை பெரிதாகப் பலன் அளிக்கவில்லை.

இதனால் இரண்டு நாடுகளும் எல்லையில் தீவிரமாக தங்கள் விமானப்படைகளைத் தயார்செய்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், "சீனாவிடமிருந்து மத்திய அரசு 5,700 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அதனால் சீனாவிடம் சண்டை இடாமல் சீன நாட்டைப் புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்கிறது.

நாட்டைப் பாதுகாக்க நம் வீரர்கள் எல்லையில் உயிர் இழந்துவருகிறார்கள். பாஜக அரசு அடிபணிந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது. பாஜக அரசின் நாடகம் பாராட்டத்தக்கதல்ல" என்றார்.

இதையும் படிங்க:கல்யாணம் நடத்தி 100 பேருக்கு கரோனா பரப்பிய குடும்பம் - ரூ.6.26 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Last Updated : Jun 29, 2020, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details